பாலிவுட் நடிகையுடன் காதல்..? புதிய சர்ச்சையில் ரவி சாஸ்திரி !! 1
பாலிவுட் நடிகையுடன் காதல்..? புதிய சர்ச்சையில் ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் பிரபல பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும் காதலித்து வருவதால் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

கிரிக்கெட்டிற்கும் சினிமாவிற்கும் இடையேயான திருமண உறவு தொடர்ந்து கொண்டே வருகிறது. கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளை திருமணம் செய்துகொள்வது தொடர்கதையாகிவருகிறது.

பாலிவுட் நடிகையுடன் காதல்..? புதிய சர்ச்சையில் ரவி சாஸ்திரி !! 2

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு முன்னதாக ஜாகீர் கான் பாலிவுட் நடிகை சாகரிகா காட்ஜையும் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவையும் திருமணம் செய்துகொண்டனர். யுவராஜ் சிங் பாலிவுட் நடிகை ஹசல் கெச்சை மணந்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியுடன் நடிகை நக்மா இணைத்து பேசப்பட்ட காலமும் உண்டு. அதன்பிறகு முன்னாள் கேப்டன் தோனிக்கும் நடிகை ராய் லட்சுமிக்கும் காதல் என பேசப்பட்டது. கங்குலி நக்மாவுடனும், தோனி ராய் லட்சுமியுடனும் டேட்டிங் செய்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

அண்மையில் கேஎல் ராகுல், நடிகை நிதி அகர்வாலுடன் வெளியே சென்ற புகைப்படம் வைரலானது. ஆனால் அவர்கள் இருவரும் சிறுவயது நண்பர்கள் என தெளிவுபடுத்தினர்.

பாலிவுட் நடிகையுடன் காதல்..? புதிய சர்ச்சையில் ரவி சாஸ்திரி !! 3

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் நிம்ரத் கவுர் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்துவருவதாகவும் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிசியான கால அட்டவணைகளுக்கு இடையேயும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்ய தவறுவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் நடிகை நிம்ரத் கவூர் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை மோசமாக இழந்துள்ளதால் ஏற்கனவே ரவி சாஸ்திரி மீது செம காண்டில் இருக்கும் இந்திய ரசிகர்கள் தற்போது இந்த தகவலை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரப்பி வருகின்றனர். மேலும் ரவி சாஸ்திரியை கடுமையாக கிண்டலடித்தும் வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *