அடுத்த ஐந்து வருடங்களில் 102 போட்டிகளை நடத்துகிறது இந்தியா !! 1

அடுத்த ஐந்து வருடங்களில் 102 போட்டிகளை நடத்துகிறது இந்தியா

அடுத்த ஐந்து வருடங்களில் இந்திய மண்ணில் மொத்தம் 102 போட்டிகளில் நடக்க உள்ளதாக பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வீறு நடை போட்டு வருகிறது.

வெளிநாட்டில் இந்திய அணியால் சிறப்பாக செயல்பட முடியாது, தோல்வியுடன் தான் நாடு திரும்பும் என்ற பொதுவான எண்ணத்தை சமீபத்தில் தென் ஆப்ரிக்கா தொடர் மூலம் தகர்த்தெறிந்த கோஹ்லி அடுத்ததாக இலங்கை சென்று ரோஹித் சர்மா தலைமையில் முத்தரப்பு டி.20 தொடரையும் வென்று வந்தது.

அடுத்த ஐந்து வருடங்களில் 102 போட்டிகளை நடத்துகிறது இந்தியா !! 2

இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 102 போட்டிகள் நடைபெற  உள்ளதாக பி.சி.சி.ஐ., வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 102 போட்டிகளில் 22 போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளாகவும், இந்த பட்டியலில் ஒரு முத்தரப்பு தொடர் கூட இடம்பெற்றுள்ளதாக தெரியவில்லை.

அடுத்த ஐந்து வருடங்களில் 102 போட்டிகளை நடத்துகிறது இந்தியா !! 3

கோடிகளை குவிக்கும் தொலைக்காட்சி உரிம ஏலம்;

இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்புவதற்காக முதல் நாள் இ-ஏலம் ரூ. 4442 கோடியுடன் முடிந்தது.

இந்திய கிரிக்கெட் அணிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2023 வரை) பங்கேற்கும் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்புவதற்காக ஏலம் இன்று நடந்தது. இதில் பங்கேற்க ஸ்டார், சோனி, பேஸ்புக், கூகுள், யப் டிவி, ஜியோ உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது பிசிசிஐ.,

அடுத்த ஐந்து வருடங்களில் 102 போட்டிகளை நடத்துகிறது இந்தியா !! 4

இந்நிலையில் இந்த சர்வதேச ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் முதல் முறையாக வெளிப்படையாக இணையதளம் மூலமாக இ-ஏலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் அதிக தொகைக்கு எந்த நிறுவனம் ஏலம் எடுக்கிறதோ, அந்நிறுவனத்துடன் பிசிசிஐ., ஒப்பந்தம் செய்து கொள்ளும்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்ப கடைசியாக ஸ்டார் நிறுவனம் கடந்த 2012ல் ரூ. 3851 கோடி ஏலம் எடுத்தது. இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் துவங்கிய இ – ஏலத்தில், ஆரம்ப தொகையாக ரூ. 4176 கோடிக்கு கேட்கப்பட்டது.

அடுத்த ஐந்து வருடங்களில் 102 போட்டிகளை நடத்துகிறது இந்தியா !! 5

இது அப்படியே ரூ. 25 கோடிகளாக அதிகரித்து ரூ. 4201.20 கோடி, ரூ. 4244 கோடி, ரூ. 4303 கோடி, ரூ. 4328.25 கோடிகள் என அதிகரித்து முதல் நாள் முடிவில் அதிகபட்சமாக ரூ. 4442 கோடியில் நின்றது.

இந்நிலையில் இந்த இ-ஏலம் நாளை 11 மணிக்கு தொடரும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள ரகசிய லாகின் மூலம், ஏலம் கேட்கின்றனர். நாளை இறுதி ஏலத்தொகை மற்றும் உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம் அறிவிக்கப்படும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *