ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 91.3 ஓவர்களில் 277 ரன்களை ஐந்து விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. கேப்டன் ரஹானேவும், ஜடேஜாவும் களத்தில் விளையாடி வருகின்றனர். மயங்க், கில், புஜாரா என இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட தவறிய நிலையில் மொத்த பொறுப்பையும் தன் தோள்களில் சுமந்து கொண்டு விளையாடினார் கேப்டன் ரஹானே.

விஹாரி மற்றும் பண்டுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஹானே, ஜடேஜாவுடன் 104 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முதல் இன்னிங்ஸில் மட்டும் மொத்தமாக ஐந்து கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலியா நழுவ விட்டுள்ளது. இதில் ரஹானேவின் கேட்சை இரண்டு முறை தவற விட்டுள்ளது அந்த அணி.
இதன் மூலம் 195 பந்துகளில் சதம் விளாசினார் ரஹானே. மழை குறுக்கிட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக இரண்டாம் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் ஆடப்பட்டது நேற்று 286 ரன்களுக்கு 5 விக்கெட் மட்டுமே அறிந்திருந்த இந்திய அணி அதன் பின்னர் 50 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து விட்டது அதிகபட்சமாக அஜின்கியா ரஹானே 112 ஆண்களும் ரவீந்திர ஜடேஜா 58 ரன்களும் எடுத்தனர் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் இதன் காரணமாக இந்திய அணி 131 ரன்கள் முன்னிலையுடன் தனது முதல் ஆட்டத்தை முடித்துக் கொண்டது