ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளும் உத்தேச 25 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு புதிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு! 1

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளும் உத்தேச 25 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு புதிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

தற்போது இந்த வருடம் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் நவம்பர் 10-ஆம் தேதி முடிவடைந்துவிடும். நவம்பர் மாதம் முடிவடைந்த பின்னர் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளும் உத்தேச 25 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு புதிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு! 2

இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியமும் கூட்டு சேர்ந்து உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி மூன்று மாதங்கள் அங்கு செல்லும் இந்திய அணியில் கிட்டத்தட்ட 25 வீரர்கள் இடம் பெறப் போகிறார்கள் என்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த 25 பேர் கொண்ட அணியில் உத்தேச வீரர்கள் பட்டியலில் தற்போது பார்ப்போம். இந்த அணியில் பல இளம் வீரர்கள் இடம் பெறப் போகிறார்கள் என்பது உறுதி.

மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடாத பத்துக்கும் மேற்பட்ட இளம் வீரர்களை தற்போது பயிற்சிக்கு பிசிசி அனுப்பியிருக்கிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி இந்த வீரர்களை எல்லாம் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இவர்களெல்லாம் அழைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா சென்று பயிற்சி கொடுப்பார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் மற்ற முக்கிய இந்திய வீரர்கள் எல்லாம் நவம்பர் 10ஆம் தேதி ஐபிஎல் தொடரை முடித்து விட்டு அடுத்த வாரமே ஆஸ்திரேலியா சென்று அந்த இளம் அணியுடன் இணைந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளும் உத்தேச 25 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு புதிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு! 3
AUCKLAND, NEW ZEALAND – JANUARY 26: Shreyas Iyer of India bats during game two of the Twenty20 series between New Zealand and India at Eden Park on January 26, 2020 in Auckland, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

உத்தேச 25 வீரர்கள் கொண்ட அணி

விராட் கோலி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், பிரித்திவி ஷா, லோகேஷ் ராகுல், அஜின்கியா ரஹானே, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, புஜாரா, ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், விருத்திமான் சஹா, ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹர், புவனேஷ்வர் குமார், நவதீப் சைனி, முகமது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாகல் இதனுடன் சேர்த்து ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்படும் புதுமுகமான இளம் வீரர்களை இந்த அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

மேலே குறிப்பிட்ட வீரர்கள் அனைவரும் நேரடியாக அங்கு சென்று முகாமில் கலந்து கொண்டு அதன் பின்னர் முக்கியமான 11 வீரர்கள் மட்டும் டெஸ்ட் ஒருநாள் டி20 தொடரில் ஆடுவார்கள் என்று தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *