"இவரால் தான் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது" முன்னாள் ஜாம்பவான் கருத்து!! 1

இந்திய அணியின் டிரெஸ்சிங் அறையில் தோனி இருப்பதால்தான் அணி வீரர்களின் மத்தியில் வெற்றிக்கான மனநிலை தொடர்ந்து நீடிக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணி எதிர்பார்த்ததை போலவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தோல்வியே தழுவாத ஒரே அணியாகவும் திகழ்கிறது. போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து அணி அவர்களது சொந்த மைதானத்தில் தடுமாறிக்கொண்டு அரையிறுதிக்குள் நுழைவதை சந்தேகம் என இருக்கும் நிலையில் இந்திய அணியின் இத்தகைய செயல்பாடு குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

"இவரால் தான் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது" முன்னாள் ஜாம்பவான் கருத்து!! 2

அதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது, விராட் கோலியின் நிலைத்த செயல்பாடு ஆகும். தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் அரைசதம் கண்டிருக்கிறார். அதற்கு  அடுத்ததாக வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்துவதாகவும்.

இவை ஒருபுறமிருக்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மிக மந்தமான நிலையில் ஆட்டத்தை தொடங்கிய தோனியை கடுமையாக விமர்சித்த அவர், தற்போது இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிப்பதற்கு முக்கிய காரணமாகவும் தோனி இருக்கிறார் என மற்றொரு கருத்தை முன்வைத்துள்ளார்.

"இவரால் தான் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது" முன்னாள் ஜாம்பவான் கருத்து!! 3

அவர் கூறுகையில், பொதுவாக தோனி தனது அனுபவத்தை மற்ற வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர். பல போட்டிகளிலும் ஐபிஎல் தொடர்களிலும் இதனை நாம் கண்டிருக்கிறோம். விராத் கோலி கேப்டன் பொறுப்பு ஏற்ற பிறகு, இக்கட்டான சூழ்நிலைகளில் தோனியை அணுகி அவரின் வழிமுறைகளை  பின்பற்றுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.

அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று தந்துள்ள ஒரு அனுபவமிக்க வீரரை தனது டிரஸ்ஸிங் ரூமில் இந்தியா கொண்டிருப்பது அதிர்ஷ்டம் தரும் ஒன்று. இந்திய வீரர்களை நல்ல மனநிலையில் வைத்திருப்பதற்கு தோனி முக்கிய பங்கு வகிக்கிறார் என்றார் விவிஎஸ் லக்ஷ்மன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *