3வது ஒருநாள் போட்டியை வென்றால், இந்திய அணிக்கு அடிக்கும் ஜாக்பாட்! 1

3-0 என நியூசிலாந்து ஒருநாள் தொடரை கைப்பற்றினால் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து முதற்கட்டமாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. அதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடக்க உள்ளது.

முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்திலும், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டு போட்டிகளை கைப்பற்றி தொடரையும் கைப்பற்றிவிட்டது. மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற ஜனவரி 24ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடக்க உள்ளது.

3வது ஒருநாள் போட்டியை வென்றால், இந்திய அணிக்கு அடிக்கும் ஜாக்பாட்! 2

ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடிக்கவுள்ள இந்திய அணி

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், முதலிடத்தில் நியூசிலாந்து அணியும் இருக்கின்றன. இந்த மூன்று அணிகளும் தலா 113 புள்ளிகள் பெற்றிருக்கின்றன.

இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றி விட்டதால் முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேநேரம் மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்று 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறலாம்.

3வது ஒருநாள் போட்டியை வென்றால், இந்திய அணிக்கு அடிக்கும் ஜாக்பாட்! 3

3வது ஒருநாள் போட்டியில் முக்கிய மாற்றம்

மூன்றாவது ஒருநாள் போட்டியை பொறுத்தவரை, ரோகித் சர்மா சில புதிய திட்டங்கள் வைத்திருப்பதாக போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதாவது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சவால் மிக்கதாக இருக்க வேண்டும் என்று முதல் போட்டியில் முதலில் பேட்டிங், இரண்டாவது போட்டியில் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். மூன்றாவது போட்டியில் அவ்வாறு இருக்காது. அந்த மைதானத்திற்கு என்ன தேவையோ அதை தேர்வு செய்வேன் என கூறினார்.

மேலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான சிராஜ் மற்றும் ஷமி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்படும் என்றும் மறைமுகமாக கூறினார்.

3வது ஒருநாள் போட்டியை வென்றால், இந்திய அணிக்கு அடிக்கும் ஜாக்பாட்! 4

ஏனெனில் அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் ஆரோக்கியத்துடனும் போதிய ஓய்விலும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுக்கவிருப்பதாக அவரது பேச்சில் தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *