Cricket, India, Bhuvneshwar Kumar, Nupur Nagar

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமாருக்கும், நுபுர் நகர் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார். தற்போது பிசியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவருக்கும் நுபுர் நகருக்கும் நேற்று கிரேட் நொய்டாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் இருவீட்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

புவனேஸ்வர் குமாருக்கு நிச்சயதார்த்தம்: நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பு 1

புவனேஸ்வர் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்றிருந்தபோது எடுத்த படத்தை பாதி தெரியும் அளவில் தனத இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அப்போது புவனேஸ்வர் குமார் உடன் படத்தில் இருப்பது தெலுங்கு மற்றும் பெங்காலி பட நடிகை என்று அனுஸ்ம்ரிதி சர்கர் என்று கூறப்பட்டது.

பின்னர் இரண்டு நாட்களுக்குப்பின் அந்த பெண்ணின் முழுப்படத்தையும் வெளியிட்டிருந்தார். தற்போது அந்த படத்தில் இருப்பர் நுபுர் நகர் என்று கூறப்படுகிறது.

புவனேஸ்வர் குமாருக்கு நிச்சயதார்த்தம்: நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பு 2

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக்கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். நான்கு போட்டிகளில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 53 ரன்களும் சேர்த்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் 7-ந்தேதி தொடங்குகிறது. இதில் புவனேஸ்வர் குமார் கலந்து கொள்கிறார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *