இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்… கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 23) நடைபெற உள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 23) நடைபெற உள்ளது.

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்… கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றம் இருக்கும் என்றே தெரிகிறது. இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால் அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி போட்டியில் ஒரு சில புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

துவக்க வீரர்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டிகளை போலவே ஷிகர் தவானுடன் சேர்ந்து ப்ரித்வி ஷாவே துவக்க வீரராக களமிறங்குவார்.

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்… கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

அதே போல் மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவிற்கான இடம் மறுக்கப்படாது என தெரிகிறது. ஆனால் மணிஷ் பாண்டே அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா ஆகியோருக்கே இடம் வழங்கப்படும் என தெரிகிறது.

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்… கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

பந்துவீச்சாளர்கள் வரிசையில் தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோரை நீக்கும் முடிவை இந்திய நிர்வாகம் எடுக்காது என்றே தெரிகிறது. ஆனால் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கே இடம் கிடைக்கும், இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் சாஹருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ்/ சாஹல், ராகுல் சாஹர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *