தயவு செஞ்சு கிளம்புங்க... மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து பார்ப்போம்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்ததுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது.

தயவு செஞ்சு கிளம்புங்க... மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

மூன்றாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும், இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை முழுமையாக இழந்துவிடும் என்பதால், ஒரு போட்டியிலாவது வெற்றி பெற இந்திய அணி நிச்சயம் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படாத ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், பிரசீத் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.

தயவு செஞ்சு கிளம்புங்க... மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

துவக்க வீரர்களாக வழக்கம் போல் ஷிகர் தவானும், கே.எல் ராகுலுமே களமிறங்குவார்கள் என தெரிகிறது. ஒருவேளை கே.எல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்க நினைத்தால் ருத்துராஜ் கெய்க்வாட் துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என தெரிகிறது. ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு அணியில் இடம் கிடைத்தால் ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்காது.

தயவு செஞ்சு கிளம்புங்க... மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

அதே போல் கடந்த இரண்டு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத வெங்கடேஷ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவிற்கு இடம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. அதே போல் பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வரும் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் சாஹருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. பும்ராஹ்வின் பனிச்சுமையை குறைப்பதற்காக பும்ராஹ்விற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவரது இடத்தில் பிரசீத் கிருஷ்ணா களமிறக்கப்படலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ஷிகர் தவான், கே.எல் ராகுல், விராட் கோலி, ருத்துராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திர அஸ்வின், தீபக் சாஹர், பிரசீத் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *