தயவு செஞ்சு கிளம்புங்க தம்பி… இளம் வீரர் அதிரடி நீக்கம்; மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான்
இலங்கை அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கே டி.20 தொடர் கிடைக்கும் என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்க வீரரான சுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், இந்த போட்டியிலும் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படாது என்றே தெரிகிறது. இதனால் இந்த போட்டியிலும் இந்திய அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில்லும், இஷான் கிஷனும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. ஒருவேளை சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.
மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோருக்கே இடம் கிடைக்கும்.
சுழற்பந்து வீச்சாளர்களாக கடந்த போட்டியை போல் இந்த போட்டியிலும் அக்ஷர் பட்டேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கே இடம் கிடைக்கும் என தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சிவம் மாவி மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த போட்டியில் கடுமையாக சொதப்பிய அர்ஸ்தீப் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்சல் பட்டேலிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
இஷான் கிஷன், சுப்மன் கில்/ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, அக்ஷர் பட்டேல், சிவம் மாவி, உம்ரன் மாலிக், ஹர்சல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல்.