ஜிம்பாப்வே அணியை அசால்டாக வீழ்த்தியதற்கு கிடைத்த பரிசு... தரவரிசை பட்டியலில் மாஸ்; இந்திய அணிக்கு எந்த இடம் ..? 1

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

ஜிம்பாப்வே சென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

ஜிம்பாப்வே அணியை அசால்டாக வீழ்த்தியதற்கு கிடைத்த பரிசு... தரவரிசை பட்டியலில் மாஸ்; இந்திய அணிக்கு எந்த இடம் ..? 2

விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ராஹ் என சீனியர் வீரர்கள் பலர் இல்லாமல், கே.எல் ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை எதிர்கொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில், ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்தநிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜிம்பாப்வே அணியை அசால்டாக வீழ்த்தியதற்கு கிடைத்த பரிசு... தரவரிசை பட்டியலில் மாஸ்; இந்திய அணிக்கு எந்த இடம் ..? 3

அதே போல் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, இதன் மூலம் 107 ரேட்டிங் புள்ளிகளை பெற்று தரவரிசையில் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. முதல் இடத்தில் 124 ரேட்டிங் புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் 2-வது இடத்தில் 119 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் உள்ளது.

ஜிம்பாப்வே அணியை அசால்டாக வீழ்த்தியதற்கு கிடைத்த பரிசு... தரவரிசை பட்டியலில் மாஸ்; இந்திய அணிக்கு எந்த இடம் ..? 4

செப்டம்பர்-அக்டோபரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை எதிர்கொள்வதால் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல்;

1. நியூசிலாந்து – 124
2. இங்கிலாந்து – 119
3. இந்தியா – 111
4. பாகிஸ்தான் – 107
5. ஆஸ்திரேலியா – 101
6. தென்னாப்பிரிக்கா – 101
7. பங்களாதேஷ் – 92
8. இலங்கை – 92
9. வெஸ்ட் இண்டீஸ் – 71
10. ஆப்கானிஸ்தான் – 69

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *