இந்திய அணியை வீழ்த்துவதே எங்கள் இலக்கு; தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய நபர் சொல்கிறார்

இந்தியச் சுற்றுப்பயணம் தென் ஆப்பிரிக்க அணியை கட்டமைக்க உதவும் என்று அந்த அணியின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் இல்லாததால் குவிண்டன் டி காக் தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்று முன் தினம் இந்தியா வந்தடைந்தது.

இந்திய அணியை வீழ்த்துவதே எங்கள் இலக்கு; தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய நபர் சொல்கிறார் !! 2

இந்நிலையில் இந்தியா தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “இந்திய தொடருக்கு எங்களிடம் சிறப்பான வீரர்கள் உள்ளனர். இந்தத் தொடர் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்காலத்தில் கட்டமைப்பதற்கு ஒரு முக்கியமானதாக அமையும்.  டூ பிளசிஸ் ஒரு சிறப்பான வீரர். அவர் தென் ஆப்பிரிக்க அணிகாக பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். எனினும் அணியின் எதிர்காலத்தை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதாலேயே டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியை வீழ்த்துவதே எங்கள் இலக்கு; தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய நபர் சொல்கிறார் !! 3

இந்தத் தொடருக்கு வந்துள்ள வீரர்களில் டி காக் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். அவருடன் அணியில் நம்பிக்கை நிறைந்த சில இளம் வீரர்கள் உள்ளனர். ஆகவே இந்தத் தொடரில் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடுவோம். இந்தத் தொடரை கைப்பற்றுவதே எங்களின் லட்சியம்” எனத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தச் சூழலில் உலகக் கோப்பைக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கும் முக்கிய தொடராக இந்திய தொடர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *