இந்த இரண்டு பேரை டார்கெட் பண்ணுங்க.. இந்திய அணிக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த கம்பீர்! 1

இந்த இரண்டு இங்கிலாந்து வீரர்களை கட்டுப்படுத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெல்லலாம் என கருத்து தெரிவித்துள்ளார் கவுதம் கம்பீர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிவரும் 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இரண்டு பேரை டார்கெட் பண்ணுங்க.. இந்திய அணிக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த கம்பீர்! 2

முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்திக்க துவங்கியது. 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு அடுத்து வந்த வீரர்களும் நிலைத்து ஆடமுடியாமல் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இரண்டு பேரை டார்கெட் பண்ணுங்க.. இந்திய அணிக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த கம்பீர்! 3

முதல் இன்னிங்சில் 195 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை துவங்கி விளையாடி வருகிறது. இதற்கிடையில் இந்திய அணி இரண்டாவது போட்டியில் மட்டுமல்லாது; இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த இதனை நிச்சயம் செய்ய வேண்டுமென கௌதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த இரண்டு பேரை டார்கெட் பண்ணுங்க.. இந்திய அணிக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த கம்பீர்! 4

“இங்கிலாந்து அணிக்கு முதல் போட்டியில் ஜோ ரூட் மற்றும் சிப்லி இருவரும் சிறப்பாக விளையாடினர். அதில் குறிப்பாக சிப்லி எந்தவித தடங்கலுமின்றி இந்திய மைதானத்தில் சிறப்பாக விளையாடினார். இது மட்டுமல்லாது கடந்த சில போட்டிகளிலும் அவர் நல்ல பார்மில் இருப்பதால் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடுவார்கள். ஆகவே சிப்லி மற்றும் ஜோ ரூட் இருவரையும் இந்த தொடரில் கட்டுப்படுத்தினால் இந்திய அணி எளிதாக தொடரை கைப்பற்றலாம்.

இந்த இரண்டு பேரை டார்கெட் பண்ணுங்க.. இந்திய அணிக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த கம்பீர்! 5

ஜோ ரூட் கீழ் வரிசையில் பென் ஸ்டோக்ஸை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். இருப்பினும் அவர் இந்திய மைதானங்களில் நிறைய தவறுகளைச் செய்து பார்த்து இருக்கிறோம். ஆகையால் அவர் நீண்ட நேரம் களத்தில் நிற்க மாட்டார் என நான் கருதுகிறேன். அவரைக் குறித்து இந்திய அணி கவலைப்படத் தேவையில்லை. மேல் கூறிய இருவருக்கு மட்டும் திட்டமிட்டு செயல்பட்டால் இந்த தொடர் இந்திய அணிக்கானது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *