2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூஸிலாந்தில் 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான கிரிக்கெட் உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. இந்நிலையில், 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
19 வயதிற்கு உட்பட்டோர்க்கான இந்திய அணிக்கு கேப்டனாக மும்பையை சேர்ந்த ப்ரித்வி ஷா செயல் படுவார். அவருக்கு துணையாக ஷுபம் கில் இருப்பார். ராஜஸ்தானின் கமலேஷ் நாகர்கோடி மற்றும் சிவம் மாவி, பெங்கால் அணியை சேர்ந்த இஷான் போரில், ஷுபம் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்குவார்கள்.
9 வயதிற்கு உட்பட்டோர்க்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பதால், கண்டிப்பாக உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடும். வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷான் போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
டிசம்பர் 8 முதல் டிசம்பர் 22 வரை பெங்களுருவில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.ப்ரித்வி ஷா மற்றும் இஷான் போரில் ஆகியோர் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி கொண்டிருப்பதால், அவர்கள் அனுமதி வாங்கிவிட்டார்கள். இவர்கள் இருவரும் பயிற்சியை டிசம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்குவார்கள்.
2016ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இறுதி போட்டியில் வந்து தோற்றுப்போன இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணியுடன் பி பிரிவில் இருக்கிறது. ஜனவரி 14ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனும், ஜனவரி 16ஆம் தேதி பி.என்.ஜி அணியுடனும், ஜனவரி 19ஆம் தேதி ஜிம்பாப்வே அணியுடனும் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் பே ஓவல் மைதானத்தில் விளையாடவுள்ளது.
இந்திய அணி வருமாறு:
https://twitter.com/BCCIRanjiTrophy/status/937256581879627777