ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. இதனை அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடவிருக்கிறது.
அடுத்ததாக, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிக்கான தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து வெளியேறிய துவக்க வீரர் ஷிகர் தவான் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இளம் வீரர் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக கடந்த இரண்டு தொடர்களில் பங்கேற்காமல் இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் குணமடைந்து அணிக்கு திரும்பி இருக்கிறார். இது ஒரு நல்ல முன்னேற்றமாக காணப்படுகிறது.
தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்டிற்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்துவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், யூசுவேந்திர சாஹல், நவதீப் சயினி மற்றும் ஷர்துல் தாக்கூர்.
India’s ODI squad against Australia: Virat Kohli (Capt),Rohit Sharma (vc), Shikhar Dhawan, KL Rahul,Shreyas Iyer, Manish Pandey, Kedar Jadhav, Rishabh Pant (wk, Shivam Dube, Ravindra Jadeja, Yuzvendra Chahal,Kuldeep Yadav, Navdeep Saini,Jasprit Bumrah,Shardul Thakur, Mohd. Shami.
— BCCI (@BCCI) December 23, 2019