இரண்டு வீரர்கள் நீக்கம்; கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

இங்கிலாந்து அணியுடனான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை, பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ம் தேதி துவங்க உள்ளது.

இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இரண்டு வீரர்கள் நீக்கம்; கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். ஷர்துல் தாகூரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதே போல் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷபாஷ் நதீமின் பெயரும் இடம்பெறவில்லை.

இரண்டு வீரர்கள் நீக்கம்; கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி;

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால், சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே (துணை கேப்டன்), கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *