ஆஸ்திரேலியாவுடன் நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூரியகுமார் யாதவிற்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நியூசிலாந்து அணியுடன் நடைபெற உள்ள 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவுற்றவுடன், பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெறும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சேத்தன் சேர்மா தலைமையிலான தேர்வுக்குழு நியூசிலாந்து அணி அணியுடனான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.
சூரியகுமார் யாதவ் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ரிஷப் பண்ட் சிகிச்சையில் இருப்பதால், இஷான் கிஷன் உள்ளே அழைத்து வரப்பட்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார். ஆனால் அவரது முழு உடல்தகுதியை பரிசோதித்த பிறகு உறுதி செய்யப்படும் என்றும் பிசிசிஐ வெளியிடப்பட்ட அறிகையில் தெரிவித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (து.கேப்டன்), சுப்மன் கில், சித்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பாரத் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ஆர் அஷ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
India’s squad for first 2 Tests vs Australia:
Rohit Sharma (C), KL Rahul (vc), Shubman Gill, C Pujara, V Kohli, S Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav— BCCI (@BCCI) January 13, 2023
ஆஸ்திரேலியாவுடன் நடைபெற உள்ள இந்த டெஸ்ட் தொடரானது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்ள மிகவும் முக்கியமானதாகும். இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை இழக்க நேரிட்டால் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளின் வெற்றியை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும். ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.