அவுங்களுக்கு வேற வழி இல்ல... அதான் தோனிய எடுத்திருக்காங்க; பாகிஸ்தான் வீரர் தேவை இல்லாத பேச்சு !! 1

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அஹமத் இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

வருகிற உலக கோப்பை தொடரில் இந்திய அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பல திட்டங்களை தீட்டி பிசிசிஐ இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது.

அவுங்களுக்கு வேற வழி இல்ல... அதான் தோனிய எடுத்திருக்காங்க; பாகிஸ்தான் வீரர் தேவை இல்லாத பேச்சு !! 2

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமித்த இந்த மாஸ்டர் பிளான் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பாராட்டு பேசியுள்ளனர் மேலும் சில வீரர்கள் அதற்கான காரணத்தையும் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அஹமத் இந்திய அணி ஏன் எம்எஸ் தோனி ஆலோசகராக தேர்ந்தெடுத்தது என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், இந்திய அணி ஒரு சிறந்த அணி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது இந்திய அணி உலகெங்கும் நடக்கும் பல்வேறு தொடர்களிலும் மிகச் சிறந்த முறையில் விளையாடியுள்ளது ஆனால் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் நெருக்கடியில் இருக்கிறார், மேலும் நெருக்கடி தாங்க முடியாததால் அவர் தனது கேப்டன் பொறுப்பை வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.

அவுங்களுக்கு வேற வழி இல்ல... அதான் தோனிய எடுத்திருக்காங்க; பாகிஸ்தான் வீரர் தேவை இல்லாத பேச்சு !! 3

இந்த நெருக்கடியை போக்குவதற்காகவே இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார், இந்திய அணியில் நிச்சயம் நெருக்கடி உள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது, ஐபிஎல் தொடரில் விளையாடிய சிறந்த 10 வீரர்களில் உலக கோப்பை தொடருக்கு தேர்வான இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை,மேலும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பதும் இந்திய அணியின் நெருக்கடியை சுட்டிக் காட்டுகிறது, என்று தெரிவித்த அவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது என்றும் தன்வீர் அஹமத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *