ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம்... முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா !! 1
ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம்… முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது.

ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம்... முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா !! 2

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே போல் சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற்றுள்ளனர்.

ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம்... முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா !! 3

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனில் டேவிட் வார்னர் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் இடம்பெறவில்லை. டேவிட் வார்னர் காயத்தில் இருந்த் முழுமையாக குணமடையாததாலும், அலெக்ஸ் கேரி உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். ஜோஸ் இங்லீஸ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். டேவிட் வார்னர் இல்லாததால் மிட்செல் மார்ஸ் துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;

சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்;

டர்வீஸ் ஹெட், மிட்செல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேன், ஜோஸ் இங்லீஸ், கேமிரான் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸியான் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *