கணுக்கால் காயம் காரணமாக செப்டம்பர் 14ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி செய்த பயிற்சியில் ஆரோன் பின்ச் கலந்து கொள்ளவில்லை, இதனால் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. கணுக்கால் காயம் காரணமாக சென்னையில் நடைபெற்ற பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆஸ்திரேலியா விளையாடிய பயிற்சி போட்டியில் கூட ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் விளையாடவில்லை.
முதல் போட்டியில் ஆரோன் பின்ச் விளையாட வாய்ப்பு இருக்கு என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்தது, ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் ஆகிவிட்டது. அப்படி ஆரோன் பின்ச் விளையாடவில்லை என்றால் இடது கை ஆட்டக்காரர் ட்ராவிஸ் எட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய ட்ராவிஸ், தனது முதல் ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
போர்டு ப்ரெசிடெண்ட்ஸ் XI அணிக்கு எதிராக விளையாடிய பயிற்சி போட்டியில் 103 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. முதல் விளையாடிய ஆஸ்திரேலியா, ஸ்மித், வார்னர், எட், ஸ்டோனிஸ் ஆகியோர் அரைசதம் அடிக்க 347 ரன் சேர்த்தது. அடுத்து விளையாடிய போர்டு ப்ரெசிடெண்ட்ஸ் XI அணி 244 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதே சமயத்தில், உடல் நலமற்ற தன் மனைவியை பார்க்க ஷிகர் தவான் செல்வதால், இந்திய அணியும் முழு பலத்துடன் செல்லவில்லை. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து தெறி பார்மில் இருக்கும் ஷிகர் தவானை இழப்பது, இந்திய அணிக்கு தான் பின்னடைவு. இதனால், ரோகித் ஷர்மாவுடன் அஜிங்க்யா ரஹானே தொடக்கவீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி: விராத் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், கே.எல் ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்யா ராகானே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் அப்டேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமர், உமேஷ் யாதவ், முகமது சமி
ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், அஸ்டோன் அகர், ஹில்டன் கார்ட்டரைட், நாதன் கவுண்டர்-நைல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பால்க்னர், ஆரோன் பின்ச், ட்ராவிஸ் எட், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் சம்பா