தற்போது இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தோல்வி பெற்ற பிறகு, இந்தியாவின் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ராவை ‘கடைசி நேரத்தின் சிறந்த பந்துவீச்சாளர்’ என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புகழ்ந்தார்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 38 ஓவரில் 224/2 என்ற நிலையில் இருக்க, அசால்டாக 300க்கு மேல் செல்லுவார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா வந்த பிறகு 50 ஓவரில் 293க்கு 6 விக்கெட் இழந்தது. கடைசி 6 ஓவரில் இருவரும் சேர்ந்து 38 ரன் மட்டுமே கொடுத்தார்கள். இதனால் தான், இவர்களை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புகழ்ந்து தள்ளினார்.
“கடைசி நேரத்தில் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். நாங்கள் சரியான பிளான் தான் போட்டோம். முதல் 38 ஓவர் வரை எங்களுடைய பிளான் சரியாக தான் சென்றது, ஆனால் கடைசி நேரத்தில் பிளான் போட்ட படி முடிக்க தவறிவிட்டோம்,” என 3வது போட்டி முடிந்ததும் ஸ்மித் கூறினார்.
“நாங்கள் எப்படி பந்துவீசுவது என பிளான் போட்டிருந்தோம். ஆனால், அவர்கள் தொடக்கத்திலும் கடைசியிலும் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களை போல் பந்துவீச்சாளர்களை வைத்து கொண்டிருப்பது சந்தோஷம் தான்.
முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக நான்காவது ஒருநாள் போட்டி பெங்களூருவிலும், ஐந்தாவது போட்டி நாக்பூர் மைதானத்திலும் நடக்கவுள்ளது.