INDvsAUS : அதிக எதிர்பார்ப்புடன் நாளை தொடங்குகிறது 4வது டெஸ்ட் போட்டி ! வெற்றி பெறுவது யார் ? 1

இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணியும் டி20 தொடரை இந்திய அணியும் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து நடைபெறு வரும் 4 டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்யில் இந்திய அணி 36 ரன்கள் மட்டும் பெற்று மோசமான தோல்வியை அடைந்துள்ளது.

INDvsAUS : அதிக எதிர்பார்ப்புடன் நாளை தொடங்குகிறது 4வது டெஸ்ட் போட்டி ! வெற்றி பெறுவது யார் ? 2

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் இந்திய அணி வெறித்தனமாக விளையாடி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் இரு அணிகளும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியது.

INDvsAUS : அதிக எதிர்பார்ப்புடன் நாளை தொடங்குகிறது 4வது டெஸ்ட் போட்டி ! வெற்றி பெறுவது யார் ? 3

மூன்றாவது டெஸ்டில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடியது. மூன்றாவது டெஸ்டில் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. இறுதி தேனீர் இடைவேளையின் இந்திய அணிக்கு 127 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்புகள் குறைவாக இருந்தால் போட்டியை ட்ரா செய்தனர்.

INDvsAUS : அதிக எதிர்பார்ப்புடன் நாளை தொடங்குகிறது 4வது டெஸ்ட் போட்டி ! வெற்றி பெறுவது யார் ? 4

தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் ஒரு வெற்றி பெற்று 1-1 என சமமாக இருக்கிறது. 4வது டெஸ்டி போட்டி பிரிஸ்பேனில் இருக்கும் காபா மைதானத்தில் நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

INDvsAUS : அதிக எதிர்பார்ப்புடன் நாளை தொடங்குகிறது 4வது டெஸ்ட் போட்டி ! வெற்றி பெறுவது யார் ? 5

ஆனால் இந்திய அணியில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 1988ம் ஆண்டிலிருந்து பிரிஸ்பேன் மைதானத்தில் 31 இன்னிஸ்சில் விளையாடி இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 24 முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் எப்படி வெற்றி பெறும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *