இந்தியா-ஆஸ்திரேலியா இடையிளான 5ஆவது மற்றும் கடைசி போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் அஜின்க்யா ரகானே, ரோகித் சர்மாவுடன் சேர்ந்து நல்ல துவக்கம் கொடுத்து தன் பங்கிற்க்கு 61 ரன் அடித்தார்.
இந்த தொடரில் அவர் அடிக்கும் 4ஆவது அரைசதமாகும். 5 போட்டிகளில் அடுத்தடுத்து 4 அரைசதங்களை அடித்துள்ளார் ரகானே.
போட்டியின் முடிவில் அவர் கூறியதாவது :
இந்த ஆடுகளம் சற்று ஒரு மாறியானது. இருதும் 240 ரன் எளிதாகவே அடித்துவிட்டோம். பந்து சற்று மெதுவாகவே பேட்டிற்கு வந்தது. நாண் இன்று ஆடிய விதம் எனக்கு பிடித்து இருந்தது.
எப்போதும் என்னால் முடிந்த வரை ஆடுவேன். சிகர் மற்றும் ரோகித் இருவருமே அணிக்காக நன்றாக ஆடுகின்றனர். போட்டி எப்போதும் ஆரோக்யமானது தான்.
நானும் டோகித்து ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்து ஆடுகிறோம். ஆஸ்திரேலியா எப்போதுமே ஒரு அதிசிறந்த அணியாகும். ஆனால் நாங்கள் எங்களுக்கு இந்திய ஆடுகளங்களின் தன்மை நன்றாகவே தெரியும். நாங்கள் வென்று விட்டோம்.
எனக் கூறினார்.
ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனையடுத்து 243 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ரோகித் சர்மாவும், ரகானேவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.
ரகானே 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், ரோகித் சர்மாவும் கேப்டன் விராட் கோலி இணைந்தார். கோலி நிதானமாக விளையாட ரோகித் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டார். சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து வந்த சர்மா 94 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் சர்மாவின் 14-வது சதம் ஆகும்.
Photo by Arjun Singh / BCCI / SPORTZPICS
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சர்மா 109 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 5 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். சர்மாவை தொடர்ந்து கோலி 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேதர் ஜாதவ்(5), மணிஷ் பாண்டே(11) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4-1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி,
‘பல்வேறு நெருக்கடிகளில் இருந்து மீண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
புவனேஷ்வர்குமாரும் பும்ராவும் சிறப்பாக பந்துவீசினார்கள். உமேஷ், ஷமிக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அவர்களும் நன்றாக பங்களிப்பு செய்தார்கள். மிடில் ஓவர்களில் குல்தீப், சாஹல் சுழற்பந்துவீச்சும் அருமை. ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் பெரிய சொத்து.
ஆடும் லெவனில் யாரைச் சேர்ப்பது என்பது கேப்டனாக எனக்கு தலைவலிதான்.
இருந்தாலும் அதுவும் நல்ல விஷயம்தான். இந்த தொடரில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன’ என்றார்.