நானே விராட் கோஹ்லியோட வெறித்தனமான ரசிகன் தான்; முன்னாள் ஜாம்பவான் ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியின் மிகப்பெரிய ரசிகன் நான் என விண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் வி.வி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத காரணத்தால், சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. இதற்கு பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மரண அடி கொடுத்து தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இதில், ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்ததுள்ளது. கோலி (47), புஜாரா (68) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட் சாய்த்தார்.
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, புஜாரா, டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்த் செய்தார். மறுமுனையில் இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த கேப்டன் விராட் கோலி (82) ஸ்டார்க் வேகத்தில் வெளியேறினார்.

தில் இந்திய கேப்டன் விராட் கோலி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருந்தாலும், இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்து அசத்தினார் கோலி.

இதை போல் ஒவ்வொரு தொடரிலும் பல சாதனைகளை அள்ளி குவித்து வரும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தான் விராட் கோஹ்லியின் மிகப்பெரிய ரசிகன் என விண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் சர் வி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், விராட் கோஹ்லி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். நான் விராட் கோஹ்லியின் மிகப்பெரும் ரசிகன். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் ஐ.பி.எல் பங்கு மிக முக்கியமானது” என்றார்.