இந்த வீரர் எதுக்கு இந்தியஅணியில் இருக்காருன்னு தெரியல.. ஆகாஷ் சோப்ரா விளாசல்!! 1

ரிஷப் பண்ட்ஆஸ்திரேலியா நாட்டு சுற்றிப்பார்க்கும் டூரிஸ்ட் போல உள்ளார் என்று அகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது அதில் ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் 2-1 என தோல்வியை தழுவியது.

இந்த வீரர் எதுக்கு இந்தியஅணியில் இருக்காருன்னு தெரியல.. ஆகாஷ் சோப்ரா விளாசல்!! 2

பின் களமிறங்கிய இந்திய அணி ஆக்ரோஷமாக செயல்பட்டு டி20 போட்டியில் 2-1 என வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தது.

இதையடுத்து வருகிற டிசம்பர் 17 நடக்க உள்ள டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் கூட ரிஷப் பண்ட் இடம்பெறாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்படாததே.

இந்த வீரர் எதுக்கு இந்தியஅணியில் இருக்காருன்னு தெரியல.. ஆகாஷ் சோப்ரா விளாசல்!! 3

இதுபற்றி கிரிக்கெட் வல்லுனரான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது ரிஷப் பண்ட் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த பயிற்சிப் போட்டியில் ஒரு பில்டராக கூட களமிறக்கவில்லை என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலை ரிஷப் பண்டுக்கு மிகவும் நெருக்கடியாக மாறிவரும் என்று கூறினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார். இது அவரது எதிர்காலத்தை பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த பயிற்சி போட்டியில் சகா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்தால் என்ன ரிஷப் பண்டை ஒரு பேட்ஸ்மேனாக களமிறக்கிருக்கலாம் என்று தனது யூடியூப் சேனலில் கூறியிருந்தார்.

இந்த வீரர் எதுக்கு இந்தியஅணியில் இருக்காருன்னு தெரியல.. ஆகாஷ் சோப்ரா விளாசல்!! 4

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர் முடிந்து விட்டது ஆனால் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை இவர் ஆஸ்திரேலியா நாட்டு சுற்றிப்பார்க்கும் டூரிஸ்ட் போல உள்ளார் என்று தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *