வீடியோ; அடுத்த போட்டியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் அஸ்வின் !! 1

வீடியோ; அடுத்த போட்டியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் அஸ்வின்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிதான் இந்திய அணி முதன்முறையாக ஆடப்போகும் பகலிரவு டெஸ்ட் போட்டி. பகலிரவு போட்டிக்கான பிங்க் நிற பந்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ; அடுத்த போட்டியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் அஸ்வின் !! 2

கொல்கத்தா ஈடன் கார்டனில் வீரர்கள் பயிற்சி செய்துவருகின்றனர். இந்நிலையில், பயிற்சியின் போது அஷ்வின் இடது கையில் பந்துவீசி பழகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் அஷ்வின், இடது கையில் பந்துவீசி பழகினார்.

இதுதொடர்பான முதலில் வெளிவந்த வீடியோவில் அஷ்வினின் பவுலிங் ஸ்டைல் இலங்கை முன்னாள் ஜாம்பவான் ஜெயசூரியாவை போன்று இருந்தது. அதன்பின்னர் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வீடியோக்கள் வைரலாகின. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை கண்ட அஷ்வின், தரம் குறைவான வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதோ தரமான வீடியோ இதுதான். இதை பகிருங்கள் என்று ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவரது இடது கை பவுலிங் ஆக்‌ஷன் சற்று தேர்ந்திருப்பதை காண முடிகிறது. எனவே கொல்கத்தா டெஸ்ட்டில் அஷ்வின் இடது கையில் பந்துவீசுவாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *