இரண்டு புதிய வீரர்களுக்கு அணியில் இடம் ; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 1

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் டெஸ்ட் தொடர் மற்றும் டி.20 தொடர் என இரண்டையும் இந்திய அணி கெத்தாக கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது.

புனேவில் நடைபெறும் இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் வழக்கம் போல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இரண்டு புதிய வீரர்களுக்கு அணியில் இடம் ; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 2

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான பல மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் இடம்பெற்றுள்ளனர். அதே போல் டி.20 தொடரில் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடாத கே.எல் ராகுல் இன்றைய போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டு ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் இன்றைய போட்டியில் கே.எல் ராகுலே விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார்.

அதே போல் மிடில் ஆர்டரில் அனைவரும் எதிர்பார்த்ததை போன்று சூர்யகுமார் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்ரேயஸ் ஐயரே வழக்கம் போல் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதே போல் குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரசீத் கிருஷ்ணா மற்றும் க்ரூணால் பாண்டியா ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரான் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா.

முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணி;

ஜேசன் ராய், ஜானி பாரிஸ்டோ, இயன் மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மொய்ன் அலி, சாம் கர்ரான், டாம் கர்ரான், அடில் ரசீத், மார்க் வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *