இந்திய அணியை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக முயற்சி செய்யும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கோச் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார்
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள், 5 t20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.பலம் வாய்ந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ள இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

2012 நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-1 என வீழ்ந்தது. இதில் குறிப்பாக அலாஸ்டர் குக் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணி திணறடித்தார், மேலும் சுழற்பந்து ஜோடிகளாக கிரீம் ஸ்வான், மற்றும் மாண்ட்டி பனசர் இருவரும் இந்திய அணி பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்தார்கள். இந்த போட்டி இந்திய அணி வீரர்களுக்கு மிக மோசமான போட்டியாகவே அமைந்தது என்று கூறலாம் அந்த அளவுக்கு இங்கிலாந்து அணி மிக சிறப்பாக செயல்பட்டது.
அதேபோன்று பிப்ரவரி 5 நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று ஆண்டி ஃப்ளவர் தெரிவித்தார், மேலும் அவர் கூறியதாவது இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த வீரர்களாக பென்ஸ்டாக், ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் உள்ளனர். இவர்களில் திறமையால் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பதற்கு இங்கிலாந்து அணி நட்சத்திர வீரரான ஜோ ரூட் உள்ளார். இவர் சுழற்பந்து வீச்சாளர்களை மிக சிறப்பாக எதிர் கொள்வார் என்று அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய மன வலிமையுடன் இந்திய வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் இவர்களை சமாளிப்பது என்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும் இருந்தபோதும் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி கொள்வார்கள் என்று தெரிவித்தார்.