இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால், கடைசி போட்டியில் எந்த அணி என வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த போட்டிக்காக காத்திருக்கின்றனர்.
இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியான இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுல் நீக்கப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் கே.எல் ராகுல் நீக்கப்பட வாய்ப்பே இல்லை எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷர்துல் தாகூர் அல்லது புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசி டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார்/ நடராஜன்.