ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் கிடையாது; ஹர்பஜன் சிங் காட்டம் !! 1
ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் கிடையாது; ஹர்பஜன் சிங் காட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் தோல்விகள் பரவலாக விமர்சிக்கப்படும் நிலையில், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் கிடையாது; ஹர்பஜன் சிங் காட்டம் !! 2

இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் தொடர் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்த தனது விமர்சனங்கள் முழுவதையும்  ஹர்திக் பாண்டியா மீது வைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில், பாண்டியா பேட்ஸ்மேனாக அதிகம் ரன்களை குவிக்கவில்லை, அவரது பந்துவீச்சின் மீதும் கேப்டனுக்கு நம்பிக்கை இருப்பது போல் தெரியவில்லை. அவர் இதே நிலையில் தொடர்ந்து பந்து வீசினால் வருங்காலத்தில் அணியில் தேர்வாவது கடினம் தான்.

ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் கிடையாது; ஹர்பஜன் சிங் காட்டம் !! 3

முதல் டெஸ்டில் ஸ்டோக்ஸ் மற்றும் கர்ரன் ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். அதே போல் இரண்டாவது டெஸ்டில் வோக்ஸ் சிறப்பான ஆல்ரவுண்டராக செயல்பட்டார்.

அவர்களின் ஆல்ரவுண்டர் திறமையை போல் சிறப்பான ஆட்டத்தை அதே போட்டிகளில் நாம் பாண்டியாவிடம் எதிர்பார்த்தோம். ஆனால், அவரால் ஓவர் நைட்டில் கபில் தேவ் ஆக முடியவில்லை. எனவே, அவரை நாம் ஆல்ரவுண்டர் என அழைப்பதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஹர்பஜன் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *