ஒருத்தனையும் சும்மா விட மாட்டோம்; பி.சி.சி.ஐ., அதிரடி !! 1

ஒருத்தனையும் சும்மா விட மாட்டோம்; பி.சி.சி.ஐ., அதிரடி

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து விராட் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரியிடம் நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்ற பி.சி.சி.ஐ.,நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிர்க்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20  போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ஒருத்தனையும் சும்மா விட மாட்டோம்; பி.சி.சி.ஐ., அதிரடி !! 2

இதில் டி.20 தொடரை மட்டும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்தடுத்தாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில், தற்போது  நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி படுமோசமாக இழந்தது. இதனையடுத்து இந்திய அணி மீது கடுமையான விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து விராட் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரியிடம் நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

ஒருத்தனையும் சும்மா விட மாட்டோம்; பி.சி.சி.ஐ., அதிரடி !! 3

வரும் செவ்வாய்க்கிழமை மும்பையில் சிஓஏ கூட்டம் நடக்கிறது. இதில் முக்கியமாக பிசிசிஐ புதிய சட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அணியின செயல்பாடு குறித்து பயிற்சியாளர் சாஸ்திரியிடம் நேரிலோ அல்லது அறிக்கை மூலமாகவோ சிஓஏ விளக்கம் கோரலாம். நிர்வாகிகள் இல்லாத நிலையில் ஆலோசனைக் குழு செயலிழந்து உள்ளது. இதனால் சிஓஏ தரப்பு அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இதற்கான கூட்டம் நடைபெறும் போது, தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் கருத்தும் கேட்கப்படும்.

ஒருத்தனையும் சும்மா விட மாட்டோம்; பி.சி.சி.ஐ., அதிரடி !! 4

இதனால் இந்திய அணியின் தற்போதைய மேலாளர் சுனில் சுப்பிரமணியம் எந்த அறிக்கையும் தரமாட்டார் மேலும் முன்பு பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்தார். மேலும் சில வீரர்கள் காயம் அடைந்தது குறித்து உடலியக்க நிபுணர் பாட்ரிக்கிடமும் விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகியோர் காயம் தொடர்பாக அறிக்கை பெறப்படும் எனத்தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *