பராவாயில்ல பசங்க பக்காவா விளையாடுறாங்கா; மகிழ்ச்சியில் இந்திய பயிற்சியளர் ராகுல் டிராவிட் !! 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி, இங்கிலாந்து மைதானத்தை புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (ஒத்திவைக்கப்பட்ட போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

பராவாயில்ல பசங்க பக்காவா விளையாடுறாங்கா; மகிழ்ச்சியில் இந்திய பயிற்சியளர் ராகுல் டிராவிட் !! 2

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சி போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

4 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி போட்டியில் இந்திய மற்றும் லெஸ்டர்சைர் அணியும் மோதின,இதில் லெஸ்டர்சைர் அணியில் இங்கிலாந்து வீரர்களுடன் புஜாரா, ரிஷப் பண்ட், பும்ரா போன்ற வீரர்கள் கலந்து விளையாடினார்கள். 4நாள் நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் 4 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி போட்டி இங்கிலாந்து மைதானத்தை புரிந்து விளையாடுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பராவாயில்ல பசங்க பக்காவா விளையாடுறாங்கா; மகிழ்ச்சியில் இந்திய பயிற்சியளர் ராகுல் டிராவிட் !! 3

இதுகுறித்து ராகுல் டிராவிட் தெரிவித்ததாவது, “மைதானம் மிகவும் அருமையாக இருந்தது உண்மையை சொல்லப்போனால் இந்த வாரம் மிகவும் சிறந்த வாரமாக அமைந்துள்ளது, மேலும் பயிற்சியும் சிறப்பாக முடிந்தது, இந்த பயிற்சி ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து கண்டிஷன்களை புரிந்து அதற்கு ஏற்றார் போல் விளையாடுவதற்கு மிகப் பெரும் உதவியாக இருந்தது, வெறும் ஒரு போட்டி இருப்பதால் அதற்கு ஏற்றார்போல் முதல் நாளிலிருந்தே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நிலை உள்ளது, மேலும் இந்த பயிற்சி போட்டியை பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *