டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் புதிய துவக்க வீரர் இவர் தான்; ரசிகர்கள் மகிழ்ச்சி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது யார் என்பது குறித்து க்ளூ கொடுத்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரரான ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்தார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, அந்த தொடர் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடியதால், டெஸ்ட் அணியிலும் தொடக்க வீரராக தனது இடத்தை தக்கவைத்தார்.

டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் புதிய துவக்க வீரர் இவர் தான்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 1

இந்நிலையில், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. ஒருநாள் தொடரில் நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால், இதில் வெற்றி பெறுவது அவசியம்.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. ரோஹித் சர்மா 4வது டி20 போட்டியின்போது காயமடைந்ததால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகினார். எனவே டெஸ்ட் போட்டிகளில் மயன்க் அகர்வாலுடன் களமிறங்கப்போகும் மற்றொரு தொடக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருவருமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்பதால் இருவரில் யார் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பது கேள்வியாக இருக்கிறது.

டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் புதிய துவக்க வீரர் இவர் தான்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 2

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணியில் ஆடிய ஷுப்மன் கில், முதல் போட்டியில் இரட்டை சதமும், இரண்டாவது போட்டியில் சதமும் அடித்தார். இப்படியாக ஷுப்மன் கில் டாப் ஃபார்மில் ஆடிவரும் நிலையில், பிரித்வி ஷாவும் சிறப்பாக ஆடிவருகிறார். இருவருமே சிறந்த இளம் வீரர்கள் என்பதால், இருவரில் யார் மயன்க் அகர்வாலுடன் இறக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், பிரித்வி ஷா – கில் ஆகிய இருவரில், தொடக்க வீரராக இறங்குவதற்கு யாருக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும் என்பதை அணி நிர்வாகத்தின் செயலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

பயிற்சி போட்டியில் மயன்க் அகர்வாலுடன் பிரித்வி ஷா தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். ஆனால் பிரித்வி ஷா நான்கே பந்தில் டக் அவுட்டானார். பிரித்வி ஷாவே பரவாயில்லை என்கிற வகையில், நான்காம் வரிசையில் இறங்கிய கில், முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். ஹனுமா விஹாரியின் சதம் மற்றும் புஜாரா அடித்த 93 ரன்களின் விளைவாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்கள் அடித்தது.

இந்த பயிற்சி போட்டியில் ப்ரித்வி ஷா தொடக்க வீரராக இறக்கப்பட்டதன் மூலம் அவர் தான், டெஸ்ட் போட்டியிலும் மயன்க் அகர்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. • SHARE

  விவரம் காண

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு !!

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே நடக்கவுள்ள டி20...

  உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணி அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் !!

  உலக லெவனை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே...

  இவர் சொதப்பியதே தோல்விக்கு காரணம்: முண்ணனி வீரரை கைகாட்டும் சஞ்சய் மாஜரேக்கர்

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய...

  வீடியோ: பவுண்டரி லைனில் பிரம்மாண்ட கேட்ச் பிடித்த டு ப்லெசிஸ் மற்றும் மில்லர்!

  தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது...

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபடிக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...