தல தோனி ரீ எண்ட்ரீ; நியூசிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத காரணத்தால், சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. இதற்கு பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மரண அடி கொடுத்து தொடரை 1-1 என சமன் செய்தது.
ஆஸ்திரேலியா அணியுடனான தொடருக்கு பிறகு நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.
இதில் டி.20 தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணி;
விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), க்ரூணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், கலீல் அஹமது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;
விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், கலீல் அஹமது. முகமது ஷமி.