உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை இந்திய நேரப்படி 3:30 மணிக்கு பலப்பரிட்சை மேற்கொள்ள இருக்கிறது.
இரு அணிகளும் நாளை நடக்க இருக்கும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு தற்போது பயிற்சி ஆட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இரு அணி நிர்வாகமும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அண்மையில் வெளியிட்டது. அந்த 15 வீரர்களில் இருந்து 11 வீரர்கள் தான் நாளை நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் களமிறங்க போகிறார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு நாளை நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் களம் இறங்கப் போகும் நியூசிலாந்து அணியில் எந்த 11 வீரர்கள் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று தற்போது பார்ப்போம்

டேவான் கான்வாய்
தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 273 ரன்கள் குவித்து தன்னுடைய பெயரை உலக அரங்கில் பதிவு செய்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பாக நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இவர் டெஸ்ட் போட்டியிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வழக்கம் போல வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் இவர் இந்தியாவுக்கு எதிராக விளையாடியது கிடையாது.நல்ல பார்மில் இருக்கும் இவர் நிச்சயமாக நாளை நடக்க இருக்கும் போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.