கேன் வில்லியம்சன்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை மிக சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு தனது அணியை முன்னேற்றி இருக்கிறார்.

மேலும் பேட்ஸ்மேனாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரும் இவர் தான். பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தியும் உள்ளார். எனவே நிச்சயமாக நாளை இந்தியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் இறுதி போட்டியில் இவர் நியூஸிலாந்து அணியில் விளையாடி தனது அணியை வழிநடத்துவார்.