பி ஜே வாட்லிங்
தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் இவர் விளையாட இருக்கிறார். நியூசிலாந்து அணிக்காக 74 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இதுவரை மிக சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

நிறைய போட்டிகளில் மிக சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை வெற்றி பெறவும் செய்திருக்கிறார். நாளை நடக்க இருக்கும் போட்டி இவருடைய 75வது போட்டி அதோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் கேரியரில் இது அவருடைய கடைசி போட்டி ஆகும். இந்தப் போட்டியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளப் போவதாக முன்கூட்டியே அறிவித்து இருந்தார். எனவே நாளைய போட்டியில் இவர் நிச்சயமாக களமிறங்குவார்.