பாகிஸ்தானை பிரித்து மேயும் ஹிட்மேன் ரோஹித் சர்மா; கொண்டாடும் ரசிகர்கள் !! 1

பாகிஸ்தானை பிரித்து மேயும் ஹிட்மேன் ரோஹித் சர்மா; கொண்டாடும் ரசிகர்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் அடித்து மாஸ் காட்டி வரும் ரோஹித் சர்மாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

பாகிஸ்தானை பிரித்து மேயும் ஹிட்மேன் ரோஹித் சர்மா; கொண்டாடும் ரசிகர்கள் !! 2

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி துவங்கிய இந்த தொடரில் இதுவரை பல போட்டிகள் நிறைவடைந்திருந்தாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருந்த இந்திய பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட்  போர் இன்று நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்தின் மான் செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தானை பிரித்து மேயும் ஹிட்மேன் ரோஹித் சர்மா; கொண்டாடும் ரசிகர்கள் !! 3

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், கே.எல் ராகுலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே பாகிஸ்தானின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி, சீரான இடைவேளையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து நிதானமாக ரன் சேர்த்தது.

இதில் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து கே.எல் ராகுல் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வரும் ரோஹித் சர்மா 85 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 24வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மாவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

அதில் சில

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *