தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இல்லை... இரண்டு வீரர்கள் நீக்கம்; பாகிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இல்லை... இரண்டு வீரர்கள் நீக்கம்; பாகிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 2

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணி அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார், இதனால் தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே போல் காயம் காரணமாக விலகிய ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் ஆவேஸ் கான் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவி பிஸ்னோய் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இல்லை... இரண்டு வீரர்கள் நீக்கம்; பாகிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 3

அதே போல் இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது.காயத்தால் விலகிய ஷாநவாஸ் தானிக்கு பதிலாக முகமது ஹஸ்னனைக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஸ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஃப்கர் ஜமான், குஷ்தில் ஷா, இஃப்திகார் அஹமத், ஷாதப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *