வீடியோ; இது எல்லாம் சும்மா ட்ரைலர் தான்... அசுரவேகத்தில் பந்துவீசி ரிஷப் பண்ட்டின் பேட்டை உடைத்த உம்ரன் மாலிக் !! 1

உம்ரன் மாலிக் வீசிய அசுரவேக பந்துவீச்சால் ரிஷப் பண்ட்டின் பேட் உடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், இந்த தொடருக்கான இந்திய அணியை ரிஷப் பண்ட் வழிநடத்தி வருகிறார். ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் போட்டியில் 211 ரன்கள் குவித்த போதிலும், பந்துவீச்சில் மிக மோசமாக செயல்பட்டதால் தோல்வியை சந்தித்தது.

வீடியோ; இது எல்லாம் சும்மா ட்ரைலர் தான்... அசுரவேகத்தில் பந்துவீசி ரிஷப் பண்ட்டின் பேட்டை உடைத்த உம்ரன் மாலிக் !! 2

இந்த தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரரான உம்ரன் மாலிக்கிற்கு, முதல் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வருவதால், இந்த தொடரில் உம்ரன் மாலிக்கிற்கு வாய்ப்பு கொடுத்து அவரை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியை வலியுறுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான ரசிகர்களும் உம்ரன் மாலிக்கிற்கு அடுத்தடுத்த போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்து வரும் நிலையில், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் எகிற வைக்கும் விதமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ; இது எல்லாம் சும்மா ட்ரைலர் தான்... அசுரவேகத்தில் பந்துவீசி ரிஷப் பண்ட்டின் பேட்டை உடைத்த உம்ரன் மாலிக் !! 3

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை (12-6-22) நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கான வலைபயிற்சியின் போது உம்ரன் மாலிக் பந்துவீச அதை ரிஷப் பண்ட் எதிர்கொண்டார். பயிற்சியிலும் வேகத்தை குறைக்காமல் உம்ரன் மாலிக் பந்துவீச ஒரு கட்டத்தில் உம்ரன் மாலிக்கின் அசுரவேத்தால் ரிஷப் பண்ட் கையில் இருந்தே பேட்டே உடைந்துள்ளது.

உம்ரன் மாலிக்கின் வேகத்தால் ரிஷப் பண்ட்டின் பேட் உடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன்னை ஆடும் லெவனில் அணி நிர்வாகம் தவிர்க்கவே முடியாத அளவிற்கு கட்டாயத்தை ஏற்படுத்திவருகிறார் உம்ரான் மாலிக்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *