இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 20) நடைபெற உள்ளது.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 20) நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத சஞ்சு சாம்சனுக்கு இரண்டாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியதால் அடுத்த போட்டிக்கான இந்திய நிர்வாகத்தின் ஆடும் லெவனின் தேர்விலும் இஷான் கிஷனுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிகிறது.

அதே போல் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவதை போன்று மணிஷ் பாண்டே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட மாட்டார் என்றே தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் முதல் போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டதால் பந்துவீச்சாளர் வரிசையில் மாற்றம் செய்யும் முடிவையும் இந்திய அணி எடுக்காது என்றே தெரிகிறது.
இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ஷிகர் தவான் (கேப்டன்), ப்ரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர்.