தற்போது இலங்கைக்கு சென்று நீண்ட தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. இரு அணிகளும் முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் ரோகித் சர்மா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மும்பை செல்ல உள்ளார்.
“மருத்துவ பரிசோதனைக்காக ரோகித் சர்மா மும்பை செல்ல உள்ளதை பிசிசிஐ மருத்துவ குழு உறுதி செய்தது,” என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
“அவரது உடல்நலம் பற்றி கவலை இல்லை. ஆகஸ்ட் 3ஆம் தேதி மும்பைக்கு சென்று ஆகஸ்ட் 4ஆம் தேதி இலங்கையில் இந்திய அணியுடன் இணைவார் ரோகித் சர்மா,” என மேலும் பிசிசிஐ அறிவித்தது.
தொடை அறுவை சிகிச்சை காரணமாக கடந்த நவம்பர் மாதம் லண்டன் சென்ற ரோகித் சர்மா, அடுத்ததாக இந்தியாவில் நடந்த ஐபில் தொடரில் தான் பங்கேற்றார். இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரோகித் சர்மா, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.