அரைசதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா... கடைசி நேரத்தில் சொதப்பிய முக்கிய வீரர்கள்; 173 ரன்கள் குவித்தது இந்திய அணி !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதி வருகின்றன.

அரைசதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா... கடைசி நேரத்தில் சொதப்பிய முக்கிய வீரர்கள்; 173 ரன்கள் குவித்தது இந்திய அணி !! 2

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டானார்.

அரைசதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா... கடைசி நேரத்தில் சொதப்பிய முக்கிய வீரர்கள்; 173 ரன்கள் குவித்தது இந்திய அணி !! 3

 

இதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவுடன் கூட்டணி சேர்ந்த ரோஹித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த போது ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார், சூர்யகுமார் யாதவ் 34 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

அரைசதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா... கடைசி நேரத்தில் சொதப்பிய முக்கிய வீரர்கள்; 173 ரன்கள் குவித்தது இந்திய அணி !! 4

 

இதன்பின் களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியொர் தலா 17 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த தீபக் ஹூடா 3 ரன்னில் வெளியேறினார், புவனேஷ்வர் குமார் டக் அவுட்டானர். கடைசி நேரத்தில் ரவிச்சந்திர அஸ்வின் 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 173 ரன்கள் எடுத்துள்ளது.

அரைசதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா... கடைசி நேரத்தில் சொதப்பிய முக்கிய வீரர்கள்; 173 ரன்கள் குவித்தது இந்திய அணி !! 5

இலங்கை அணி சார்பில் தில்சன் 3 விக்கெட்டுகளையும், தசுன் ஷனாகா மற்றும் கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *