இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து முழு அளவிலான தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. தற்போது முதல் டெஸ்ட் பஒட்டி கொல்கத்தவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவிருக்கிரது. டிசம்பர் 24ஆம் தேதி வரை இந்த சுற்றுப்பயணம் தொடரும். டெஸ்ட் தொடர் டிசம்பர் 6ஆம் தேதி முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 10ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்கவுள்ளது.
இந்த தொடரின் முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகள் முதலில் பகலிரவு ஆட்டமாக நடத்தப்பட இருந்தது. பகல் 1.30க்கு துவங்க முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த போட்டிகள் பகல் 11.30க்கு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி மொகாலியிலும் நடக்கவுள்ள போட்டிகள் தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விஷாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டி முன்னதாக திட்டமிட்ட படியே 1.30க்கு துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கைத் தொடரின் போட்டி அட்டவணை:
டெஸ்ட் தொடர்
- முதல் போட்டி, நவ்.16-20, கொல்கத்தா
- இரண்டாவது போட்டி, நவ்.24-28, நாக்பூர்
- மூன்றாவது போட்டி, டிசம்.02-06, டெல்லி
ஒருநாள் தொடர் அட்டவணை :
- முதல் ஒருநாள் போட்டி, டிசம்.10, தர்மசாலா, பகல் 11.30 மணி
- இரண்டாவது போட்டி, டிசம்.13, மொஹாலி, பகல் 11.30 மணி
- மூன்றாவது போட்டி, டிசம்.17, விசாகப்பட்டினம், பகல் 1.30 மணி
டி20 தொடர் அட்டவணை :
- முதல் டி20 போட்டி, டிசம்.20, கட்டாக், மாலை 7.00 மணி
- இரண்டாவது டி20 போட்டி, டிசம்.22, இந்தூர், மாலை 7.00 மணி
- மூன்றாவது டி20 போட்டி, டிசம்.24, மும்பை, மாலை 7.00 மணி
தற்போது கொல்கத்தாவில் நடைபெற்ரு வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ட்ராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நான்காவது நாளின் இறுதியில் இந்தியாவின் கையே ஓங்கி இருக்கிறது. நாளை மதியம் வரிய இந்திய அணி பேட்டிங் செய்தால் கூட போட்டி ட்ராவில் தான் முடிய அதிக வாய்பப்புகள் இருக்கின்றன.