விண்டீஸ் அணியுடனான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசால்டாக அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி 1ம் தேதி நடைபெறுகிறது.
இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் ஒரு மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும், சரியாக பயன்படுத்தி கொண்டு இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செய்து கொடுத்து வரும் தீபக் ஹூடா இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறுவார் என தெரிகிறது. முதல் போட்டியில் காரணமே இல்லாமல் இவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஸ்ரேயஸ் ஐயரும் கடந்த போட்டியில் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்ததால், அடுத்த போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டு, தீபக் ஹூடாவிற்கு இடம் கொடுக்கப்படும் என தெரிகிறது.
இது தவிர ஆடும் லெவனில் வேறு மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. துவக்க வீரராக கடந்த போட்டியை போல் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவே களமிறக்கப்படுவார் என தெரிகிறது. ஸ்ரேயஸ் ஐயர் இல்லாவிட்டால் ரிஷப் பண்ட் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்குவார் என தெரிகிறது. நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவும், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக்கும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த போட்டியை போல் இந்த போட்டியிலும் ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார், ரவி பிஸ்னோய் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரே இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங்.