Cricket, West Indies, India, T20 Rankings

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த  ஆறே நாட்களுக்குப் பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு டெஸ்டுகள், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மண்ணில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 4 ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியை ராஜ்கோட்டில் தொடங்கி ஏழு வாரங்கள் நடைபெற இருக்கிறது.

இந்தியா vs வேஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!! 1
(Photo Source: Getty Images)

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா இரு அணிகளும் 1948 முதல் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் 30 வெற்றிகளும், 28 வெற்றிகளும் பெற்றுள்ளன. 46 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்பிரீஸ், தேவேந்திர பிஷூ, கிரைக் ப்ராத்வாட், ரோஸ்டன் சேஸ், ஷேன் டவுரிச், ஷானோன் கேப்ரியல், ஜஹார் ஹாமில்டன், சிம்ரோன் ஹெட்மியர், ஷை ஹோப், ஆல்ஜார்ரி ஜோசப், கீமோ பால், கியரன் பவல், கெமர் ரோச் மற்றும் ஜோமெல் வரிசன்.

அட்டவணை:

முதல் டெஸ்ட் – அக்டோபர் 4-8, ராஜ்கோட்

இரண்டாவது டெஸ்ட் – அக்டோபர் 12-16, ஹைதராபாத்

முதல் ஒரு நாள் – அக்டோபர் 21, குவஹாத்தி

இரண்டாவது ஒரு நாள் – அக்டோபர் 24, இந்தூர்

மூன்றாவது ஒரு நாள் – அக்டோபர் 27, புனே

நான்காவது ஒரு நாள் – அக்டோபர் 29, மும்பை

ஐந்தாவது ஒருநாள் – நவம்பர் 1, திருவனந்தபுரம்

முதல் T20 – நவம்பர் 4, கொல்கத்தா

இரண்டாவது T20 – நவம்பர் 6, கான்பூர் / லக்னோ

மூன்றாவது T20 – நவம்பர் 11, சென்னை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *