எதிர்காலத்தை கணிக்க முடியாது,ஆனால் இந்திய அணி இத கண்டிப்பா செய்யும்; சவுரவ் கங்குலி பேட்டி!! 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

வருகிற 2022 முதல் 2031 வரை 5 t20 உலகக் கோப்பை 3 ஒரு நாள் உலக கோப்பை மற்றும் 2 சாம்பியன்ஷிப் டிராபி நடைபெற உள்ளது, கடைசியாக இந்திய அணி தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வெற்றி பெற்றது அதற்கு பின் எந்த ஒரு ஐசிசி தொடரிலும் இந்திய அணி வெற்றி பெறவில்லை.

குறிப்பாக தோனிக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி தோனியை விட அதிக வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தாலும் முக்கியமான தொடரான ஐசிசி தொடரில் இந்திய அணிக்கு ஒரு கோப்பையை கூட வெற்றி பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதற்காக விராட் கோலி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் டி20 தொடர் கேப்டனாக பயணிக்க மாட்டேன் என்று முடிவெடுத்தார். டி20 தொடர் கேப்டனாக செயல்படுங்கள் என்று எவ்வளவோ பிசிசிஐ அறிவுறுத்தியும் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததால், பிசிசிஐ ஒருநாள் மற்றும் டி20 தொடர் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து விட்டது.

எதிர்காலத்தை கணிக்க முடியாது,ஆனால் இந்திய அணி இத கண்டிப்பா செய்யும்; சவுரவ் கங்குலி பேட்டி!! 2

வெள்ளை பந்து போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது ஒரு சிறந்த முடிவு என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ இன் தலைவருமான சௌரவ் கங்குலி பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

எதிர்காலத்தை கணிக்க முடியாது,ஆனால் இந்திய அணி இத கண்டிப்பா செய்யும்; சவுரவ் கங்குலி பேட்டி!! 3

வருகிற 2022 முதல் 2011 வரை ஐசிசியால் நடத்தப்படும் தொடர்கள் வருடந்தோறும் வரவுள்ளது,இதில் இந்திய அணி கலந்துகொண்டு வெற்றிபெறும் என்று நம்புகிறேன், குறிப்பாக 2019 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் தோல்வியை தழுவியது மேலும் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறியது, இருந்தபோதும் இந்திய அணி மீது நான் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளேன். இதனால் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் என்று நான் கூறவில்லை அது எந்த ஒரு அணிய முடியாது, இந்திய அணி சில ஐசிசி தொடர்களில் வெற்றி பெறும் என்று கூறுகிறேன் என்று அதில் பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர், எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது முடியாத காரியம் ஆனால் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது, குறிப்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்துவார்கள் என நம்புகிறேன் என்று கங்குலி பேசியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *