இந்தியா - இலங்கை முதல் டி20 : இலங்கை துவம்சம்!!! 93 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!! 9

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான கட்டக்மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி இலங்கையை துவம்சம் செய்து 93 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இந்தியா - இலங்கை முதல் டி20 : இலங்கை துவம்சம்!!! 93 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!! 10

இந்தியா:

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: 

 தரங்கா ,டிக்வெல்லா, குசல் ஜனித் பெரேராமேத்யூஸ், குணரத்னே, திசரா பெரேரா (கேப்டன்), தசுன் சானகா,  அகிலா தனஞ்ஜெயா,துஸ்மந்தா சமீரா, விஷ்வா பெர்னாண்டோ, நுவான் பிரதீப்

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 17, ஸ்ரேயாஸ் ஐயர் 24, கே.எல்.ராகுல் 61, தோனி 39, மணிஷ் பாண்டே 32 ரன்கள் எடுத்தனர். இந்தியா - இலங்கை முதல் டி20 : இலங்கை துவம்சம்!!! 93 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!! 11

இந்நிலையில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடி வரும் இலங்கை அணி, தொடக்கத்திலேயே திக்வெல்லா விக்கெட்டை இழந்து தடுமாறியது. இருப்பினும் உபுல் தரங்கா, குசல் பெராரா ஆகியோர் நிலைத்து ஆடத்தொடங்கினர்.இந்தியா - இலங்கை முதல் டி20 : இலங்கை துவம்சம்!!! 93 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!! 12

ஆனால் ஆட்டத்தின் போக்கு மாறுவதற்குள் தரங்காவின் விக்கெட்டை வீழ்த்திய சஹால், இலங்கையை மீண்டும் தடுமாறச்செய்தார். அதைத்தொடர்ந்து நிலைத்து ஆடக்கூடிய மெத்தீவ்ஸ் விக்கெட்டையும் எடுத்த சஹால், அடுத்ததாக அசெலா குனரத்னே மற்றும்  திசாரா பெராராவின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.இந்தியா - இலங்கை முதல் டி20 : இலங்கை துவம்சம்!!! 93 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!! 13

இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 64 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறிப் போனது. பின்னர் வந்த பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் சேர்ந்து மீதம் இருந்து விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

4 ஒவர்கள் வீசி 23 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்த யுஜவேந்திர சகால் ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *