ஏப்ரலில் இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்

இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஏப்ரலில் நடைபெறவுள்ளது.

during the ICC Women’s World Twenty20 2012 Group A match between Australia and England at Galle International Stadium on October 1, 2012 in Galle, Sri Lanka.

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் திட்டத்தின் கீழாக இந்தத் தொடர் நடைபெறுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் 2018 ஏப்ரல் 8-ஆம் தேதியும், 2-ஆவது ஆட்டம் 11-ஆம் தேதியும், 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

TAUNTON, ENGLAND – JUNE 29: India batsman Smriti Mandhana celebrates her century with Mona Meshram during the ICC Women’s World Cup 2017 match between West Indies and India at The County Ground on June 29, 2017 in Taunton, England. (Photo by Stu Forster/Getty Images)

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில், அதில் இங்கிலாந்து வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்த இரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன.
இந்த ஒருநாள் தொடரானது, இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ளது.

England players celebrate as England win the ICC Women’s World Cup 2017 final match against India at Lord’s in London, England, Sunday, July 23, 2017. (AP Photo/Rui Vieira)

அதற்கு முன்பாக, மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆரம்பத் தொடரில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. இந்தத் தொடர் பிப்ரவரி 5 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் அணி எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.