நாங்களும் கெத்து தான்; இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் படை
இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஹேதர் நைட் (67) அரைசதம் அடித்து கைகொடுத்தார். இவரைத் தவிர்த்து நாடிலா சிவர் (20), டாமி பியாமவுண்ட் (37) ஆகியோர் மட்டும் ஓரளவு கைகொடுத்தனர். மற்ற வீராங்கனைகள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. இதையடுத்து இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சபாலி வர்மா (30), ஸ்மிருதி மந்தனா (15) சுமாரான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ஜெமியா (26) ஓரளவு கைகொடுத்தார். அடுத்து வந்த வேதா கிருஷ்ண மூர்த்தி (7) பாட்டியா (11) நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பவுண்டரிகளாக விளாசினார். இவருக்கு தீப்தி சர்மா நல்ல கம்பெனி கொடுத்தார்.
4 needed in 4 balls. And this is what #HarmanpreetKaur
did: ?pic.twitter.com/WCuub9rynu— Female Cricket (@imfemalecricket) January 31, 2020
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் ஒரு இமாலய சிக்சர் பறக்கவிட்டார். இதன் மூலம் 3 பந்துகள் மிஞ்சமிருந்த நிலையில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் (42) அவுட்டாகாமல் இருந்தார். வரும் பிப்ரவரி 2ஆம் தேதி இந்திய அணி அடுத்த லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.